சிதம்பரம் அருகே வாடிக்கையாளர் கட்டிய பணத்தை திருடிய வங்கி காசாளர் கைது!
சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் வாடிக்கையாளர் கட்டிய பணத்தை ஏமாற்றி ரூ.10 ஆயிரத்தை திருடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி காசாளரை போலீஸார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் பிடிபட்டார்.
சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் வாடிக்கையாளர் கட்டிய பணத்தை ஏமாற்றி ரூ.10 ஆயிரத்தை திருடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி காசாளரை போலீஸார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் பிடிபட்டார்.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது, இந்த வங்கி காசாளராக பணியாற்றுபவர் ஜெயக்குமார் (வயது 59). இவரது சொந்த ஊர் தஞ்சாவூர். சிதம்பரத்தில் தங்கி தினந்தோறும் வங்கிக்கு வந்து செல்கிறார். இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த குமார் (28) என்பவர் நகையை அடகு வைத்திருந்தார். அதை திருப்புவதற்காக சனிக்கிழமை ஒரு லட்சத்து ஐந்து ஆயிற்றம் (1,05,000/-) ரூபாயை வங்கிக்கு கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்தார்.
காசாளர் அந்த பணத்தில் 10 ஆயிரத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் தனது டிராயரில் போட்டுக் கொண்டார். இதை வாடிக்கையாளர் கவனிக்கவில்லை. பின்னர் காசாளர் பணத்தில் 10 ஆயிரம் ரூபாய் குறைவாக இருக்கிறது என்று சொல்லி வாடிக்கையாளரிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தார். ஆனால் வாடிக்கையாளரோ சரியாக எண்ணிதான் பணத்தை கொடுத்தேன் என்று கூறினார். ஆனால் காசாளர் ஏற்க மறுத்து விட்டார். அதன் பின்னர் வாடிக்கையாளர் வீட்டிற்க்கு சென்று கூடுதலாக 10 ஆயிரம் கொண்டு வந்து பணத்தை வங்கியில் செலுத்தினார்.
பிறகு அவர் இது பற்றி வங்கி மேலாளரிடம் புகார் செய்தார். அதன்பின் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் அந்த வங்கிக்கு சென்று காசாளர் அறையில் உள்ள காண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் வாடிக்கையாளர் குமார் பணம் கொடுப்பதும், அதில் 10 ஆயிரம் ரூபாயை எடுத்து காசாளர் தனது டிராயரில் போடுவதும் பதிவாகி இருந்தது. இதனையடுத்து வாடிக்கையாளரின் பணத்தை திருடியதாக வங்கி காசாளர் ஜெயக்குமாரை ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.