வெளிநாட்டினரின் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி: மதுரையில் 4 பேர் கைது
வெளிநாட்டினரின் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 4 பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கணினி தொடர்பான
வெளிநாட்டினரின் போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 4 பட்டதாரி வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கணினி தொடர்பான தகவல்களை நன்கு அறிந்தவர்களாக தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் என்று போலீஸார் கூறினர்.
நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் வசிப்பவர்களின் ஏடிஎம் கார்டு நம்பர், பின் நம்பர் பாஸ்வேர்ட் அகியவற்றை அங்கிருந்து பெற்று, அவை போன்று இங்கே போலியாக கார்டுகளைத் தயாரித்து இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு 963 முறைகள் இந்தக் கார்டுகளை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளில் எடுத்துள்ளனர். மதுரை தாசில்தார் நகரைச் சேர்ந்த அந்த 4 பேரை மதுரை கியூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.