முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவை சிறைவாசிகளுக்கு அடுத்தமாதம் வளாகத் தேர்வு: சிறைத்துறை டிஐஜி ராசேந்திரன்

கோவை மத்திய சிறையில் பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்பு முடித்த சிறைவாசிகளுக்கு அடுத்த மாதம் வளாகத் தேர்வு நடைபெறவுள்ளது என்று சிறைத்துறை கோவை சரக டிஐஜி சீ.ராசேந்திரன் கூறினார். ஈரோடு கிளைச்சிறையில் திடீர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:58 AM
பகிர்:

கோவை மத்திய சிறையில் பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்பு முடித்த சிறைவாசிகளுக்கு அடுத்த மாதம் வளாகத் தேர்வு நடைபெறவுள்ளது என்று சிறைத்துறை கோவை சரக டிஐஜி சீ.ராசேந்திரன் கூறினார்.
 ஈரோடு கிளைச்சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 கோவை சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைச்சிறைகளான பொள்ளாச்சியில் 35 பேர், அவிநாசியில் 6 பேர், திருப்பூரில் 19 பேர், பல்லடத்தில் 20 பேர், தாராபுரத்தில் 22 பேர், ஈரோட்டில் 45 பேர், பவானியில் 20 பேர், கோபியில் 51 பேர், சத்தியில் 13 பேர், பெருந்துறையில் 7 பேர், நீலகிரியில் 5 பேர், கூடலூரில் 12 பேர், குன்னூரில் 6 பேர், சிங்காநல்லூர் திறந்தவெளிச்சிறையில் 44 பேர், கோவை மத்திய சிறையில் 1,123 பேர் உள்ளனர்.
 சிறையில் செல்போன், கஞ்சா பயன்படுத்தல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கைதிகள் வசதிக்காக தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாதம் ரூ.30-க்கு கைதிகள் பேச முடியும். ஒரு அழைப்பு 30 நிமிடங்களுக்கு ரூ.10 என 3 அழைப்புகள் பேசலாம்.  கைதியின் வழக்குரைஞர் அல்லது உறவினரின் தொலைபேசிகளுக்கு மட்டுமே பேச அனுமதிக்கப்படும்.
 சிறைகளில் பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை ஊக்கப்படுத்தும் வகையில் கோவை சிறையில் முதல்முறையாக அடுத்த மாதம் வளாகத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் சென்னை, கோவையை சேர்ந்த முன்னணி தொழில்நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
 சிறைத்தண்டனையை பூர்த்தி செய்யும் நிலையில் உள்ள கைதிகள் மட்டுமே வளாகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். பணியில் சேர்ந்த பின்னரும் அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து உற்றுநோக்குவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.