முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே புயல் பாதுகாப்பு மையங்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:34 PM
பகிர்:

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு அதிக மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வல்லம்படுகை, திருநாரையூர், நந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புயல் பாதுகாப்பு மையங்களில் மின்வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளதா என ஆட்சியர் ஆய்வின் போது பார்வையிட்டு கேட்டறிந்தார். ஆட்சியருடம் சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் எம்.விஜயா ஆகியோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments