முகப்பு
தற்போதைய செய்திகள்

தீபாவளி பண்டிகை: சிதம்பரத்தில் திரண்ட சுற்றுப்புற கிராம மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் பட்டாசு வாங்குவதற்காக சிதம்பரத்தை சுற்றியுள்ள கிராமக்கள் வெள்ளிக்கிழமை சிதம்பரம் நகருக்கு திரண்டதால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:34 PM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் பட்டாசு வாங்குவதற்காக சிதம்பரத்தை சுற்றியுள்ள கிராமக்கள் வெள்ளிக்கிழமை சிதம்பரம் நகருக்கு திரண்டதால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சிதம்பரம் வட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஏழை, எளிய மக்கள் தீபாவளி பண்டிகைக்காக துணிமணிகள், பட்டாசு, மளிகை பொருள்கள் வாங்க வெள்ளிக்கிழமை சிதம்பரம் நகருக்கு திரண்டனர். இதனால் நகரின் நான்கு வீதிகளான கீழரதவீதி, தெற்குரதவீதி, மேலரதவீத, வடக்குரதவீதி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகைகடைகள், காய்கறி மார்க்கெட் ஆகியவை உள்ள மேலரதவீதியில் கூட்டம் திரண்டதால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மேலரதவீதியில் ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் துணிமணிகள் மற்றும் பொருள்கள் வாங்குவதற்கு ஏதுவாக ஓசூர், திருப்பூர், தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை, களக்குறிச்சி, நாமக்கல் பகுதிகளிலிருந்து துணி வியாபாரிகள் வந்து நடைபாதை கடைகளை அமைத்திருந்தினர். இக்கடைகளில் அதிகமான மக்கள் துணிமணிகளை குறைந்த விலைக்கு வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது. மேலரதவீதியில் போலீஸார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து ஓலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததாலும், போதிய போலீஸார் இல்லாததாலும் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெருக்கடியினால் வடக்குரதவீதியில் புகைப்படக்காரர் ராஜீவ்காந்தி என்பவர் டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments