காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக மழை
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. ஆனாலும் இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவில்லை. மாணவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் வழக்கம்போல் அவரவர் பணிகளை மேற்கொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. ஆனாலும் இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவில்லை. மாணவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் வழக்கம்போல் அவரவர் பணிகளை மேற்கொண்டனர்.
இலங்கை அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. மழை தொடர்ந்த நிலையில் இல்லாமல் விட்டுவிட்டு பெய்துவருவதால், சாலை உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் எளிதில் வடிந்துவிடுகிறது.
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தீபாவளி விடுமுறையில் இருந்துவிட்டு திங்கள்கிழமை முதல் கடலுக்குள் செல்லத் தொடங்கினர். இலங்கை பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், குறைந்த தூரத்தில் மீன்பிடித்துவிட்டு திரும்பும் வகையிலேயே திட்டமிட்டு கடலுக்குள் சென்றுள்ளனர்.
திருநள்ளாறு, பேட்டை, விழுதியூர், தென்னங்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் காலம் கடந்த நிலையில், நடவுப் பணிகள் நடக்கிறது. இப்போது பெய்துவரும் மழையால் இப்பணியில் பாதிப்பு ஏற்படாது என விவசாயிள் தெரிவிக்கின்றனர்.