மிக மோசமான நிலையில் பண்ருட்டி காவல் நிலையம்
பண்ருட்டியில் திருவதிகையில் 15.5.1924ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவல்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது 1949ல், பண்ருட்டியில் உள்ள அரசு இடத்தில் மாற்றப்பட்டது.
பண்ருட்டியில் திருவதிகையில் 15.5.1924ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காவல்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அது 1949ல், பண்ருட்டியில் உள்ள அரசு இடத்தில் மாற்றப்பட்டது.
சாய் கிராமம் 15, குக் கிராமங்கள் 27, நகராட்சி வார்டு 33, ஆகியவை இந்த காவல்நிலையத்துக்கு உட்பட்டு உள்ளது. 1949ல் ஓடு வேய்ந்த கட்டடத்தில் இயங்கி வரும் இந்த காவல்நிலையம், மிக மோசமான நிலையில் சிதிலமடைந்து லேசான மழைக்குக் கூட ஒழுகும் நிலையில் உள்ளது. இதனால், காவலர்கள், ஆய்வாளர்கள் அமர்ந்து பணி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக் காலத்தில் அதில் உள்ள வாரைகள், ஓடுகள் பலவீனமடைந்து உள்ளதாலும், சுவர்கள் ஈரப்பதம் ஏறி ஊறி இருப்பதாலும் எப்போது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
இதனால் இங்கு உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதனை வேறு கட்டடத்துக்கு மாற்ற காவல்துறை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.