ஸ்ரீபெரும்புதூரில் லாரி டிரைவரை ஆபாசமாக பேசிய போக்குவரத்து தலைமை காவலர் சொளந்தரராஜனை தாக்கிய வடமாநில லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சொளந்தரராஜன். இவர் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மணிகூண்டு பகுதியில் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் நிறுத்தப்பட்டிருந்துள்ளார். ஆனால் சொளந்திரராஜன் போக்குவரத்தை சீர்செய்யாமல் அருகில் உள்ளகடை ஒன்றில் நின்றுக்கொண்டிருந்துள்ளார். அப்போது திருவள்ளூர் பகுதியில் இருந்து பெங்களூர் செல்வதற்காக டிரைலர் லாரி ஒன்று மணிகூண்டு அருகில் உள்ள வளைவில் திரும்பியுள்ளது.
இதையடுத்து கடையில் இருந்து ஓடிவந்த போக்குவரத்து போலீஸôர் சொளந்திரராஜன் ட்ரைலர் லாரியை மடக்கி லாரியை பின்னோக்கி எடுத்து நேராக செல்லும்படி கூறியுள்ளார். அதற்கு லாரி டிரைவர் பின்னால் வாகனங்கள் நிற்கிறது இது பெரிய ட்ரைலர் லாரி எனவே பின்னால் எடுக்க முடியாது என இந்தியில் கூறியுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சொளந்திரராஜன் லாரி டிரைவரை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் லாரியில் இருந்து கீழே இறங்கி போக்குவரத்து போலீஸ் சொளந்திரராஜனை தாக்கியுள்ளார். நடுரோட்டில் இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதை பார்த்த பொதுமக்கள் இருவர் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து லாரி டிரைவரை பலமாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து லாரி டிரைவரை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மத்தியபிரதேச மாநிலம், கந்தார் தாலுக்காவை சேர்ந்த நந்தகுமார்(33) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லாரி டிரைவரும், போக்குவரத்து போலீஸôரும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.