முகப்பு
தற்போதைய செய்திகள்

இரிடியம் கலந்த பஞ்சலோக பாத்திரம் எனக்கூறி ரூ.40 ஆயிரம் பணம் மோசடி செய்த நால்வர் கைது

சிதம்பரம் அருகே உள்ள வடக்கு பிச்சாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25). கட்டட மேஸ்திரியாக உள்ளார். இவரிடம் வடக்குப்பிச்சாவரத்தைச் சேர்ந்த கரிகாலன் (41), காட்டுமன்னார்கோயில் அருகே

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:41 PM
பகிர்:

இரிடியம் கலந்த பஞ்சலோக பாத்திரம் எனக்கூறி ரூ.40 ஆயிரம் பணம் மோசடி செய்ததாக நான்கு பேரை சிதம்பரம் நகர போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள வடக்கு பிச்சாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25). கட்டட மேஸ்திரியாக உள்ளார். இவரிடம் வடக்குப்பிச்சாவரத்தைச் சேர்ந்த கரிகாலன் (41), காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள புடையூரைச் சேர்ந்த இளவரசன் (28), நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மேலையூரைச் சேர்ந்த சிவக்குமார் (34), சிதம்பரம் அருகே உள்ள வீரன்கோயில்திட்டைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) ஆகிய நால்வரும் சேர்ந்து தங்களிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் கலசத்தில் உள்ள இரிடியம் கலந்த பஞ்சலோக பாத்திரம் உள்ளது என ஒரு பெட்டியை அளித்து ரூ.50 ஆயிரம் ரொக்கம் கேட்டுள்ளனர்.

பாத்திரத்தை விற்று பணம் தருவதாகவும், அதுவரை பாத்திரத்தை வைத்துக் கொண்டு பணம் தருமாறு கரிகாலனிடம் மேற்கண்ட நால்வரும் வலியுறுத்தியுள்ளனர். அதன் பேரில் ரூ.40 ஆயிரம் பணத்தை கரிகாலன், மேற்கண்ட நால்வரிடம் வழங்கியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பித் தராததால் கரிகாலன் சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராமிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட நால்வரையும் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.