டாஸ்மாக் மதுபானக்கடையை உடைத்து ரொக்கம், மது திருட்டு
காட்டுமன்னார்கோயில் வெங்கடேஸ்வரா தியேட்டர் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. தினமும் ரூ.1 லட்சத்திற்கு மதுபாட்டில்கள் விற்பனையாகும் கடையாகும். தற்போது மதுபானக்கடைகளில் இரவில்
காட்டுமன்னார்கோயிலில் டாஸ்மாக் மதுபானக்கடையை உடைத்து ரூ.9 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்கள் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
காட்டுமன்னார்கோயில் வெங்கடேஸ்வரா தியேட்டர் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. தினமும் ரூ.1 லட்சத்திற்கு மதுபாட்டில்கள் விற்பனையாகும் கடையாகும். தற்போது மதுபானக்கடைகளில் இரவில் பணத்தை வைத்துச் சென்றால் விற்பனையாளரே பொறுப்பு என தெரிவித்ததால், ரூ.9 ஆயிரம் தொகையை தவிர மீதமுள்ள தொகையை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் எடுத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை கதவை பூட்டிக் கொண்டு சென்றனர். சனிக்கிழமை அதிகாலை கதவு உடைக்கப்பட்டு மதுபானக்கடை திறந்திருப்பதாக அப்பகுதி மக்கள் மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் சென்று பார்வையிட்ட போது, கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து ரூ.9 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.