சிறப்பு காவல் இளைஞர் படைத் தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 7,549 பேர் எழுதினர்
தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் இளைஞர் படை பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத்தில்
சிறப்பு காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் திருநெல்வேலி மாவட்டத்தில் 7,549 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர். 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் இளைஞர் படை பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப் பள்ளி, தூய யோவான் கல்லூரி, தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, புனித சவேரியார் பள்ளி மற்றும் வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி ஆகிய 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
தேர்வில் திருநெல்வேலி மாநகர் பகுதியை சேர்ந்த 749 பேரும், புறநகர் பகுதியை சேர்ந்த 6,220 பேரும் பங்கேற்றனர். தேர்வு நடைபெறும் மையங்களை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சுமித்சரண், திருநெல்வேலி எஸ்.பி. விஜேந்திரபிதரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.