குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் சாவு :அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் உயிரிழந்தார். மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் உயிரிழந்தார். மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே, மலையூனூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் மனைவி அன்னவள்ளி(24). இவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்காக மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்னவள்ளி திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு, ரத்தப்போக்கு அதிகமானதால் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அன்னவள்ளி கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Advertisement
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறி, மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற ராமநத்தம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது.
உடற்கூறு பரிசோதனைக்கு பிறகு, அன்னவள்ளி உடல் உறவினர்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.