கொடிக்கம்பம் சேதம்: சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் சாலைமறியல்
பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டி கிராமத்தில் பஸ்நிறுத்தம் அருகே உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தில் உள்ள கொடிகள் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக
சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கொடி சேதப்படுத்தியதை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டி கிராமத்தில் பஸ்நிறுத்தம் அருகே உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தில் உள்ள கொடிகள் மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிதம்பரம்-கடலூர் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொடியை சேதப்படுத்தியவர்களை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மறியல் வாபஸ் பெறப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.