வயல்களில் பிடித்த மடையான்களை பறிமுதல் செய்த வனத்துறையினர்!
காட்டுமன்னார்கோயில் பகுதியில் கிராமப்புறங்களில் கொக்கு மற்றும் மடையான்களை பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் சிதம்பரம் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார்,
காட்டுமன்னார்கோயில் அருகே வயலில் பிடித்த மடையான்களை வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
காட்டுமன்னார்கோயில் பகுதியில் கிராமப்புறங்களில் கொக்கு மற்றும் மடையான்களை பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் சிதம்பரம் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் மற்றும் களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோயில் அருகே வீரநத்தம் கிராமத்தில் சின்னையன் (50) என்பவர் வயல்வெளியில் வலை வைத்து இரண்டு மடையான்களை பிடித்த போது கையும், களவுமாக பிடிபட்டார். பின்னர் வனத்துறையினர் அவரிடமிருந்து இரண்டு மடையான்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். பின்னர் உயிருடன் இருந்த இரண்டு மடையான்களை வயல்வெளியில் பகுதியில் பாதுகாப்பாக பறக்கவிடப்பட்டன.