திருநெல்வேலி அருகே விவசாயி கொலை: இருசமூகத்தினரிடையே மோதல் அபாயம்
திருநெல்வேலி அருகே இன்று மர்மநபர்களால் ஒரு விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் காணப்படுகிறது.
திருநெல்வேலி அருகே இன்று மர்மநபர்களால் ஒரு விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் காணப்படுகிறது.
திருநெல்வேலி அருகே உள்ள தாளையூத்து கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (40) நேற்று இரவு வயலுக்கு போன இவர் வீடு திரும்ப வில்ல்லை. எனவே அவர்து குடும்பத்தினர் இன்று இன்று காலை வயலுக்கு சென்று பார்த்தபோது அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இந்த கொலையை அதே ஊரைச்சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் செய்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் காணப்படுகிறாது. எனவே அங்கே டி.எஸ்.பி தலைமையில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.