முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 546

இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:45 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீ அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் நவ.13-ம் தேதி புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 546 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், முத்து, கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.  உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 546 ரூபாய் கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 32 கிராம், வெள்ளி 100 கிராம் மற்றும் அமெரிக்கா டாலர்-1, மலேசியா ரிங்கட் 62, பக்ரைன் தினார்-அரை ஆகியவை இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.