இளமையாக்கினார் கோயில் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றம்!
சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயில் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு
சிதம்பரம் நகரில் உள்ள இளமையாக்கினார் கோயில் தீர்த்த குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது.
சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் இளமையாக்கினார் கோயில் உள்ளது. இக்கோயில் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கியதாக வரலாறு கூறுகிறது. இச்சிறப்பு வாய்ந்த கோயில் திருக்குளத்தில் ஆகாயத் தாமரைகள் முற்றிலும் படர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் சிவபக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து தங்களது சொந்த செலவில் ஆட்களை கொண்டு திருக்குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தினர்.