நெல்லை அருகே தொழிலாளி பலத்த பாதுகாப்புடன் உடல் அடக்கம்: கொலையாளி யார்? மர்மம் நீடிப்பு
திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடல் பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. 3 வது நாளாக இக்கொலைக்கான காரணம் தெரியவராததால்
திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடல் பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. 3 வது நாளாக இக்கொலைக்கான காரணம் தெரியவராததால் போலீஸார் திணறுகின்றனர்.
சுத்தமல்லி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளையன் மகன் பரமன் என்ற பரமசிவன் (43). கூலித் தொழிலாளியான இவர் சனிக்கிழமை இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 3 வது நாளான செவ்வாய்க்கிழமை போலீஸார் பேச்சுவார்த்தையை பரமசிவன் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி சடங்கு நடைபெற்றது.பரமசிவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவராததால் போலீஸார் குழப்பத்தில் உள்ளனர். நவ. 2 ம் தேதி கோபாலசமுத்திரத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சுத்தமல்லியில் அதே சமூகத்தை சேர்ந்த தொழிலாளி பரமசிவன் கொலை செய்யப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே பரமசிவன் கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் சுத்தமல்லியை சேர்ந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரமசிவன் கொலையில் மர்ம நீடிக்கிறது. பேட்டை, சுத்தமல்லி வழியாக 2 தினங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை பஸ்கள் இயக்கப்பட்டது. எனினும் இரவு நேரங்களில் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை.