ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற முதியவர் உடல் கரை ஒதுங்கியது!
சிதம்பரம் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற முதியவரின் உடல் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
சிதம்பரம் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற முதியவரின் உடல் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
சிதம்பரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம் (70). இவர் பரவனாற்றின் எதிர்கரையில் செவ்வாய்க்கிழமை மதியம் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றுக்குள் இறங்கிய மாடு ஒன்றை பிடிக்க ஆற்றில் இறங்கிய போது முதியவர் சம்பந்தம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றார். ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்ற முதியவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் முதியவர் சம்பந்தம் உடல் பரவனாற்றில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.