முகப்பு
தற்போதைய செய்திகள்

டெண்டுல்கர் சிறப்பு தபால் தலை விற்பனை

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 200-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றதை அடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சிறப்பு தபால்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:54 PM
பகிர்:

அஞ்சல் துறை சார்பில் கிரிக்கெட் வீரர் டெண்டுலகர் சிறப்பு தபால் தலைகள் புதுவை தலைமை தபால் நிலையத்தில் விற்கப்படுகின்றன என தபால்துறை தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 200-வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றதை அடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சிறப்பு தபால் தலைகளையும், சிறப்பு மினியேச்சர் அட்டையையும் மும்பையில் வெளியிட்டார்.தபால் தலையின் விலை ரூ.20 ஆகவும், சிறப்பு மினியேச்சர் அட்டையின் விலை ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து புதுவைதலைமை தபால் நிலையத்தில் விற்கப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்போர் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இவற்றை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.