முகப்பு
தற்போதைய செய்திகள்

மாணவி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்-போலீஸார் மீது கல் வீச்சு

பண்ருட்டி வட்டம் வடக்கு பாளையம் கிராமத்தை விவசாயி கணேசன் என்பவரது மகள் மாலதி(18) களளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி பள்ளியில் +2 படித்துவந்த அவர்,இன்று பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:54 PM
பகிர்:

பண்ருட்டி வட்டம் வடக்கு பாளையம் கிராமத்தை விவசாயி கணேசன் என்பவரது மகள் மாலதி(18) களளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி பள்ளியில் +2 படித்துவந்த அவர்,இன்று பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. தகவலறிந்த உறவினர்கள் பண்ருட்டி- கடலூர் சாலையில் அண்ணா கிராம பஸ்  நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து  பேச்சு வார்த்தை நடத்தினர்.இதில் மாணவியின் உறவினர்களுக்கும் போலீஸாருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது.இதனையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.இதனை கண்டு ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் போலீஸார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் மாணவியிடம் பள்ளி கட்டணத்தை கட்டுமாறு தொடர்ந்து வற்புறுத்திவந்ததால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →