தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் கனமழை: சாலைகளில் வெள்ளம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சிதம்பரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சிதம்பரம் நகரில்

G.Sundararaj

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சிதம்பரம் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சிதம்பரம் நகரில் 59 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

இதனால் நகரில் அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. தொடர் கனமழையால் தில்லையம்மன் கோயில் குளத்தை சுற்றி இந்து அறநிலையத் துறையினரால் சமீபத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தொடர் கனமழையினால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதால், அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை விபரம்: சிதம்பரம்- 59 மி.மீ, புவனகிரி- 69 மி.மீ, பரங்கிப்பேட்டை- 63 மி.மீ, அண்ணாமலைநகர் 19.6 மி.மீ, சேத்தியாதோத்ப்பு- 35.3 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

SCROLL FOR NEXT