ஜேசிபி இயந்திரத்தை திருடியவர் கைது
கரூர் அருகே கவுண்டம்பாளையம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). இவர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் வைத்துள்ளார். கடந்த 29ம்தேதி வீட்டின் முன் இயந்திரத்தை நிறுத்திவிட்டு காலையில்
கரூர் அருகே ஜேசிபி இயந்திரத்தை திருடிய இளைஞரை போலீஸார் திங்கள் கிழமை கைது செய்தனர்.
கரூர் அருகே கவுண்டம்பாளையம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(45). இவர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் வைத்துள்ளார். கடந்த 29ம்தேதி வீட்டின் முன் இயந்திரத்தை நிறுத்திவிட்டு காலையில் வந்து பார்த்த போது அவற்றை யாரோ திருடிச் சென்று விட்டனர். இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் பஞ்சப்பட்டி அருகே உள்ள கள்ளமுத்தாம்பட்டியில் புதருக்கிடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று ஜேசிபி இயந்திரத்தை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பாலசுப்பிரமணியன்(22) என்பவர்தான் ஜேசிபி இயந்திரத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்தனர்.
Advertisement