தரங்கம்பாடியில் 25 பவுன் நகை,வெள்ளி பொருள்கள் திருட்டு
தரங்கம்பாடி தெற்கு ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பூபாலன்.இவர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு தனது வீட்டைப் பூட்டிவிட்டு அமெரிக்காவில் உள்ள தனது மகள் உமா என்பவரின்
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பூட்டியிருந்த வீட்டில் 25 பவுன் நகைகள்,வெள்ளி பொருள்கள் திருடப்பட்டிருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.
தரங்கம்பாடி தெற்கு ஆரிய நாட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பூபாலன்.இவர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு தனது வீட்டைப் பூட்டிவிட்டு அமெரிக்காவில் உள்ள தனது மகள் உமா என்பவரின் பிரசவத்திற்காக அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.தரங்கம்பாடியில் அதே தெருவில் வசித்து வரும் பூபாலனின் சகோதரர் மகன் விஜயபாலன் என்பவர் பூட்டிக்கிடக்கும் பூபாலனின் வீட்டை அவ்வப்போது சென்று பார்த்து விட்டு வருவார்.
இந்நிலையில் புதன்கிழமை காலை விஜயபாலன் சென்று பார்த்தபோது வீட்டின் வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்துள்ளன.பீரோக்களில் இருந்த 25 பவுன் நகைகள்,அரை கிலோ மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
Advertisement
இது குறித்து பூபாலனின் மகன் தரங்கம்பாடியில் வசித்து வரும் ராஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் பொறையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நாகையிலிருந்து மோப்ப நாயுடன் வந்த கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே பொறையாறு,தரங்கம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக தொடர்ச்சியாக திருட்டு சமபவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது.இது இப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் காவல்துறையினர் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாக நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்கள் போலீஸாருக்கு பெரும் சவாலகாவே இருப்பதாகக் கூறப்படுகிறது.