முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை

திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்(59). விவசாயி. புதன்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம்  திருக்கோவிலூர் அருகே விவசாயி வீட்டில் நள்ளிரவில் சுமார் 20 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

 திருக்கோவிலூர் அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்(59). விவசாயி. புதன்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

 இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் பார்த்தபோது வீட்டின் முன்பக்க அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடப்பதைக் கண்டு நடராஜன் அதிர்ச்சியடைந்தார்.

 பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து பீரோவை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

 தகவலறிந்த டிஎஸ்பி நரசிம்மவர்மன் மற்றும் அரகண்டநல்லூர் காவல் நிலைய போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் சோதனையும் நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →