முகப்பு
தற்போதைய செய்திகள்

கரூர்: வாகனம் மோதி ஏடிஎம் வங்கி காவலாளி சாவு

பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(55). இவர் திருக்காம்புலியூரில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இரவு நேர காவலாளியாக

Updated On : 29 நவம்பர், 2013 at 7:09 PM
பகிர்:

கரூர் அருகே வாகனம் மோதி ஏடிஎம் வங்கி காவலாளி வெள்ளிக்கிழமை பரிதாபமாக இறந்தார்.கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(55). இவர் திருக்காம்புலியூரில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இரவு நேர காவலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.

 இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் டீ குடிக்க கரூர்-திருச்சி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.