ராமதாஸ் மீது அவதூறு வழக்கு பதிவு: நேரில் ஆஜராக உத்தரவு
11.5.13ல் திருச்சி சிறையில் இருந்து ராமதாஸ் வெளி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ராமதாஸ் முதல்வர் மீது அவதூறாக செய்திகளைப் பரப்பினார்
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:32 PM
பாமக தலைவர் ராமதாஸ் மீது திருச்சியில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
11.5.13ல் திருச்சி சிறையில் இருந்து ராமதாஸ் வெளி வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ராமதாஸ் முதல்வர் மீது அவதூறாக செய்திகளைப் பரப்பினார் என்று, திருச்சி அரசு வழக்குரைஞர் அசோகன் செவ்வாய்க்கிழமை இன்று முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை ஏற்றுக் கொண்ட நீதிபதி வேல்முருகன், வரும் நவ. 4ம் தேதி ராமதாஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினார்.