முகப்பு
தற்போதைய செய்திகள்

பைக் மோதி கட்டட மேஸ்திரி சாவு

வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன்(40). பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(29). இவர்கள் இருவரும் கட்டட மேஸ்திரிகள். இந்நிலையில் இருவரும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையை கடக்க முயன்ற கட்டட மேஸ்திரி உயிரிழந்தார்.

வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன்(40). பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(29). இவர்கள் இருவரும் கட்டட மேஸ்திரிகள். இந்நிலையில் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை ஆராசூர் கூட்டுச்சாலை அருகே கட்டட வேலையை முடித்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். பின்னர் சாலையின் எதிர்ப்புறம் செல்வதற்காக வந்தவாசி-சேத்பட் சாலையை கடந்துள்ளனர். அப்போது வந்தவாசி நோக்கி வந்த மோட்டார் பைக் இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சகாதேவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் காயமடைந்த வெங்கடேசன், பைக்கில் வந்த தனியார் என்ஜினியரீங் கல்லூரி மாணவர்கள் ராஜேஷ்கண்ணா(21), அசோக்குமார்(21) ஆகிய 3 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் வந்தவாசி வடக்கு போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →