சேத்தியாத்தோப்பு அருகே ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் உடல்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள விழுப்பந்துறையைச் சேர்ந்த செந்தில்குமார் (38). இவருக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. இவர் புதன்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி போடப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.