முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜை

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜையாக ஓலை சுவடிவைத்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜையாக ஓலை சுவடிவைத்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நவராத்திரி நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி பூஜை வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சன்னதிக்கு முன்பாக உள்ள சங்கு மண்டபத்தில் மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரருக்கு உகந்த விருட்சம் தர்ப்பை என்பதால், தர்ப்பையைகொண்டு கூர்ச்சம் வடிவமைக்கப்பட்டது. அங்கு ஓலைச்சுவடி வைக்கப்பட்டது.

விக்னேஸ்வரபூஜை, புன்னியாகவாஜனம், கலசபூஜை நடத்தப்பட்டு பிரசாதங்கள் வைத்து மகா  தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி ஏ.ராஜராஜன்வீராசாமி, தருமபுர ஆதீன  கட்டளை விசாரணைப் பிரதிநிதி  கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,  சிவாச்சாரியார்கள்,  கோயில் சிப்பந்திகள், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். திங்கள்கிழமை விஜயதசமி நாளில் அம்பு போடும் நிகழ்ச்சி இக்கோயில் சார்பில் நடத்தபடவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →