தற்போதைய செய்திகள்

கிறிஸ்துவ பத்திரிகைகள் "அல்லா” என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது: மலேசிய நீதிமன்றம்

தினமணி

மலேசியாவில் உள்ள கிறிஸ்துவ பத்திரிகைகள் "அல்லா” என்ற சொல்லை கடவுளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.

திங்கள்கிழமை இன்று மலேசிய நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், கடந்த 2009ல் கீழ் நீதிமன்றம் ஹெரால்ட் என்ற பத்திரிகைக்கு அல்லா என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்து, இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கிறிஸ்துவ மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இந்த அல்லா என்ற வார்த்தை கட்டாயம் இல்லை என்பதாலும், கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால், மற்றவர்கள் குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதே கருத்தைத்தான் மலேசிய அரசும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டது. மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது.

மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர்.

200க்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் தலைமையிடமான புத்ராஜெயாவுக்கு வெளியே கூடியிருந்து இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT