முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே கொடி கம்பங்கள் உடைத்து கொடிகளுக்கு தீவைப்பு: சாலைமறியல்

சிதம்பரம் அருகே காங்கிரஸ் கட்சி கொடிக் கம்பத்தை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கொடிக் கம்பங்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கட்சி கொடிகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் பல்வேறு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

சிதம்பரம் அருகே காங்கிரஸ் கட்சி கொடிக் கம்பத்தை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் கொடிக் கம்பங்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு கட்சி கொடிகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் பல்வேறு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே கருப்பூர் கிராமத்தில் கீழத்தெரு மதகு அருகே அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி, மனித உரிமைக்கழகம் ஆகிய 6 கட்சி கொடிக்கம்பங்கள் இருந்தன. புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் காங்கிரஸ் கட்சி கொடிக் கம்பத்தை தவிர மற்ற 5 கட்சிகளிள் கொடிக்கம்பங்களை உடைத்து, அதிலிருந்த கொடிகளை எடுத்துச் சென்று நடுத்தெரு இறக்கம் பகுதியில் கொளுத்திவிட்டு தலைமறைவாகி உள்ளனர்.

இதுகுறித்து வியாழக்கிழமை காலை தகவல் அறிந்த பல்வேறு கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் கொடிக் கம்பங்களை சேதப்படுத்தியதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், துணைச் செயலாளர் குறிஞ்சிவளவன், ஒன்றியச் செயலாளர் மணவாளன் ஆகியோர் சென்று 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இல்லையெனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியதை அடுத்து அப்பகுதி மக்கள் மறியலை வாபஸ் பெற்றனர். இதனால் காலை 6 மணி முதல் 9 மணி வரை கொள்ளிடக்கரை கிராம சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments