சீர்காழி அருகே பெருமாள் கோவிலிலிருந்த சுவாமி சிலைகள் திருட்டு
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கடவாசல் வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்த 4 உலோகச் சிலைகள் திருட்டுப் போனது வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரியவந்தது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கடவாசல் வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்த 4 உலோகச் சிலைகள் திருட்டுப் போனது வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரியவந்தது.
சீர்காழியை அடுத்த கடவாசலில் உள்ளது வரதாரஜப் பெருமாள் கோவில். இந்தக் கோவில், பூஜைகளுக்குப் பின்னர் வியாழக்கிழமை இரவு பூட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்தக் கோவிலின் அர்ச்சகர் சத்தியநாதன், கோவிலுக்கு வந்த போது, கோவிலின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது, கோவிலினுள் இருந்த ஷ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், வரதராஜப் பெருமாள் சுவாமிகளின் (உத்சவ மூர்த்திகள்) உலோகச் சிலைகள் களவுப் போனது தெரியவந்தது. இந்தச் சிலைகள் சுமார் ஒன்றரை அடி முதல் 2 அடி உயரம் கொண்டவை.