முகப்பு
தற்போதைய செய்திகள்

டெங்கு காய்ச்சலால் 3 ம் வகுப்பு மாணவன் பலி: 10 பேர் காய்ச்சலால் பாதிப்பு

பள்ளிப்பட்டு ஒன்றியம் பொதட்டூர்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் பொன்முடி(8). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பொன்முடிக்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:22 PM
பகிர்:

மர்ம காய்ச்சலால், 3 ஆம் வகுப்பு மாணவன் திங்கள்கிழமை இறந்தார். மேலும், பத்து குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு  மற்றும் தனியார் மருத்துவகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 பள்ளிப்பட்டு ஒன்றியம் பொதட்டூர்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் பொன்முடி(8). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பொன்முடிக்கு, கடந்த 4 நாட்களாக காய்ச்சல் வந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 ஞாயிற்றுக்கிழமை இரவு காய்ச்சல் அதிகமானதால், அவரை சென்னை தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பொன்முடி திங்கள்கிழமை இறந்தான். பொன்முடி டெங்கு காய்ச்சலால் தான் இறந்துள்ளார் என அந்த தனியார் மருத்துவ மனை சான்று வழங்கியுள்ளது என அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.

 மேலும் பொதட்டூர் பேட்டை பகுதியில் உள்ள, சிவா மகள் இந்திராணி(8) மகன் தயாளன்(4), டில்லிபாபு(14), மகேஷ்குமார்(9), பூஜா(9) உள்பட பத்து குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் வந்து பொதட்டூர்பேட்டை, திருத்தணி மற்றும் சென்னை ஆகிய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 தகவல் அறிந்ததும், மாவட்ட சுகாதார பணிகளின் உதவி இயக்குனர் பிரபாகரன் மற்றும் மருத்துவர்கள் நேரில் சென்று, அங்கு நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், இறந்த மாணவன் பொன்முடி டெங்கு காய்ச்சலால் தான் இறந்தாரா என உதவி இயக்குனர் விசாரித்து வசாரனை மேற்கொண்டுள்ளார்.

 மேலும் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பொதட்டூர்பேட்டையில், வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்து தடுப்பு மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.