முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆற்றில் விழுந்து முதியவர் சாவு

நாகை மாவட்டம் பொறையாறு ராஜாம்பாள் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நடத்துனர் ஞானப்பிரகாசம்(78).இவர் திங்கள்கிழமை காலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.பின்னர் வீடு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:23 PM
பகிர்:

நாகை மாவட்டம் பொறையாறு ராஜாம்பாள் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நடத்துனர் ஞானப்பிரகாசம்(78).இவர் திங்கள்கிழமை காலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.பின்னர் வீடு திரும்பவில்லையாம்.இந்நிலையில் அன்று பிற்பகலில் தரங்கம்பாடி உப்பனாற்று பாலம் அருகே ஆற்றில் ஒரு சடலம் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.அப்போது அது ஞானப்பிரகாசத்தின் உடல் என்பது தெரிய வந்தது.

இது குறித்த தகவல் அறிந்த பொறையாறு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments