முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சியில் அமைந்துள்ளது அட்டப்பாளையம் கிராமம். இங்குள்ள 200குடியிருப்புகளில்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

தற்போதைய செய்திகள்

ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சியில் அமைந்துள்ளது அட்டப்பாளையம் கிராமம். இங்குள்ள 200குடியிருப்புகளில்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:26 PM
பகிர்:

அட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள குடிசைகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சியில் அமைந்துள்ளது அட்டப்பாளையம் கிராமம். இங்குள்ள 200குடியிருப்புகளில்  500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் ஞாயிறு கிராமத்தை சேர்ந்த சிலர் குடிசை வீடுகளை கட்டியுள்ளனர். அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டியுள்ள குடிசை வீடுகளை அகற்றக்கோரி அட்டப்பாளையம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சீமாவரம்-காரனோடை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற சோழவரம் போலீஸார் சாலை மறியல் செய்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் சிறிது நேரம் வாக்கு வாதம் ஏற்பட்டது.  பொன்னேரி வட்டாட்சியர் ராஜேந்திரன் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக சீமாவரம்-காரனோடை சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →