ஸ்ரீவில்லிபுத்தூரில் கோஷ்டி மோதல்: மூவருக்கு அரிவாள் வெட்டு: 6 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூரில் முன் விரோதத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பும் கொடுத்து புகாரின் பேரில் 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் முன் விரோதத்தில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பும் கொடுத்து புகாரின் பேரில் 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநகர்-பாண்டியன்நகரைச் சேர்ந்தவர் க.கருப்பையா (49). இவரிடம் ஒத்தப்பட்டி-சண்முகசுந்தராபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் சசிக்குமார் (26) என்பவர் ரூ.40 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் சசிக்குமார் பணத்தைத் திரும்பித் தரவில்லையாம். இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கருப்பையாவின் சற்று மன நலம் பாதித்த மகன் முனியாண்டியை, சசிக்குமார் கிண்டல் கேலி செய்துள்ளார். இதனை அறிந்த கருப்பையா போய் சசிக்குமாரைக் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து மு.சசிக்குமார், இவரது தம்பி மற்றும் பார்த்தால் அடையாளம் தெரியக்கூடியவர் ஆகிய மூவரும் சேர்ந்து வந்து கருப்பையாவையும் அங்கிருந்த அவரது மருகன் சந்திரன் (28) என்பவரையும் ஆபாசமாகப் பேசியுள்ளார்கள். மேலும் அரிவாளர், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கருப்பையா ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீஸார் சசிக்குமார் அவரது தம்பி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சசிக்குமார் புகார்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சசிக்குமார் கொடுத்த புகாரில், தனக்கும் கருப்பையாவிற்கும் கொடுக்கல் வாங்கல் முன்விரோதம் இருந்து வந்ததாயும், இதனால் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, கருப்பையா பணத்தைத் திருப்பிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில், கருப்பையா தன்னை சாதியைக் கூறி இழிவாகப் பேசி அரிவாளாள் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதன் பேரில் போலீஸார் கருப்பையா, சி.சந்திரன், க.முனியாண்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.