சினிமா விழா சர்ச்சை: சோனியாவை சந்தித்து ஷிண்டே விளக்கம்
மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே பாட்னாவில் குண்டு வெடிப்பு நடந்த அன்று மும்பையில் நடந்த பாலிவுட் திரைப்படத்தின் இசை வெயியீட்டு விழாவில் கலந்து
மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, பாட்னாவில் குண்டு வெடிப்பு நடந்த அன்று மும்பையில் நடந்த பாலிவுட் திரைப்படத்தின் இசை வெயியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்தது.
இதனையடுத்து இன்று சோனியாவின் வீட்டிற்கு சென்ற ஷிண்டே, தான் சினிமா விழாவில் கலந்து கொண்டது குறித்து சோனியாகாந்தியிடம் விளக்கம் அளித்தார். மேலும் அவர் சுமார் 20 நிமிடம் வரை சோனியாவிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.