முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் தேவர் ஜெயந்தி விழா

சிதம்பரம் மந்தகரையில் நரேந்திர மோடி எழுச்சி பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 106வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:33 PM
பகிர்:

சிதம்பரம் மந்தகரையில் நரேந்திர மோடி எழுச்சி பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 106வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

பேரவைத் தலைவர் ஜி.தண்டபாணி முன்னிலை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில், அனைத்து இளைஞர்களும் கட்டாயம் தேவர் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். செயலாளர் ரவி வரவேற்றார். அலங்கரிக்கப்பட்ட தேவர் படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் பாரத யுவ பரிஷத் அமைப்பு பொருளாளர் குருமூர்த்தி, மநத்கரை மணி, சிவக்குமார், கண்ணன், முருகன், சொக்கநாதன், சுரேஷ், புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுதேசி பொருள்களை வாங்க வேண்டும், ரத்ததானம் செய்ய வேண்டும் என இளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரவை செயலாளர் ரவி நன்றி கூறினார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments