முகப்பு
தற்போதைய செய்திகள்

நடிகர் டி.ராஜேந்திருக்கு சொந்தமான இடம் ஆக்கரமிப்பு: போலீஸில் புகார்

சிதம்பரம் நகர வீதியில் உள்ள தனக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் டி.ராஜேந்தர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:33 PM
பகிர்:

சிதம்பரம் நகர வீதியில் உள்ள தனக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் டி.ராஜேந்தர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் நகரில் தெற்கு ரதவீதி பஸ் நிறுத்தம் எதிரே நடிகர் டி.ராஜேந்திருக்கு சொந்தமான காலி மனை உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் அவரது அனுமதி பெறாமலேயே திமுக பிரமுகர் உதவியுடன் கேரளாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக கடையை அமைத்துள்ளார். இதனை அறிந்த டி.ராஜேந்தர் தனது உதவியாளர் மதி மூலம் தனது இடத்தில் கொட்டகை போட்டு சிலர் ஆக்கரமித்துள்ளதாக நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் புகாரை பதிந்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் தீபாவளி பண்டிகை வரை வியாபாரம் செய்து கொள்வதாகவும், அதற்கு உண்டான வாடகை தொகையை அளித்து விடுவதாக துணிக்கடை வியாபாரி தெரிவித்ததால் இரு தரப்பினரிடம் எழுதி வாங்கி போலீஸார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments