வேளாங்கண்ணியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் 110 பேருக்கு வாந்தி மயக்கம்
வேளாங்கண்ணியில் மாதா கோயில் திருவிழாவினை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் 110 பேர் உள்பட சுமார் 150 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாயினர்.
வேளாங்கண்ணியில் மாதா கோயில் திருவிழாவினை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் 110 பேர் உள்பட சுமார் 150 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாயினர்.
சர்ச்சு திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணிக்காக வந்த காவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அருகில் உள்ள, சர்ச்சுக்கு உட்பட்ட பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு நேற்று இரவு உணவு வழங்கப்பட்டிருந்தது. இந்த உணவினை உண்ட போலீஸார் 110 பேரும், அதிகாரிகள் சுமார் 40 பேரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.