விருதுநகர் நகராட்சியில் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் மணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இதுவரையில் இருக்கிற நீரை பகிர்ந்து குறிப்பிட்ட வார்டு பகுதிகளுக்கு என 10 நாள்களுக்கு ஒருமுறை பிரித்து வழங்கி வந்தனர். இதனால், குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதோடு, தண்ணீர் வராத நாள்களில் வெளியிலிருந்து விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதை தவிர்க்கும் வகையில் நகராட்சி பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஆனைக்குட்டம் பகுதியில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. அதனால், வரத்து ஓடையில் உள்ள 13 கிணறுகளிளும் தண்ணீர் உயர்ந்து வருகிறது. மேலும், காரிசேரி, ஒண்டிப்புலிநாயக்கனூர் ஆகிய கல் கிடங்குகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
இனிமேல், நகராட்சி பகுதியில் 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் இருந்ததை, 5 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தேவையான அளவு குடிநீர் ஆதாரம் கிடைத்துள்ளதாக நகராட்சி ஆணையாளர் மணி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.