ஆசிரியர் தினத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரைக் கொல்ல முயற்சி!
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆர்.ராமலிங்கம் (64). பணி ஓய்வு பெற்ற ஆசிரியர். இன்று காலையில் இவரது வீட்டின் கதவை 2 பேர் தட்டியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆர்.ராமலிங்கம் (64). பணி ஓய்வு பெற்ற ஆசிரியர். இன்று காலையில் இவரது வீட்டின் கதவை 2 பேர் தட்டியுள்ளனர். ராமலிங்கம் அப்போது யோகா செய்து கொண்டிருந்தாராம். கதவைத் திறந்த போது, வீட்டுக்குள் நுழைந்த இருவரில் ஒருவர், ஆசிரியரை கட்டிப் பிடித்துக் கொள்ள, இன்னொருவர் அவரது கழுத்தை அறுத்துள்ளார். கழுத்து அறுபட்ட நிலையில் போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ராமலிங்கம் இது குறித்து சைகை மூலம் போலீஸாரிடம் கூறியுள்ளார். போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ராமலிங்கம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரைத் தாக்கியது பழைய மாணவர்கள் என்று தெரிய வந்தது. ராமலிங்கம் குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தார் என்றும், அதில் ஏதாவது பிரச்னை எழுந்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் போலீஸாரிடம் சிலர் கூறியுள்ளனர்.