முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்களில் 14 பேர் விடுதலை

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜூலை, 30-ம் தேதியும், 31-ம் தேதியும் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தது. இவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:31 PM
பகிர்:

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் 29 பேரில் 14 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், வெள்ளிக்கிழமை இவர்கள் மண்டபம் வருவார்கள் எனவும் மீன் வளத்துறை அதிகாரி தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த ஜூலை, 30-ம் தேதியும், 31-ம் தேதியும் கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தது. இவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டும் விடுதலை கிடைக்கவில்லை. புதன்கிழமை தமிழக மீனவர்களுடன் காரைக்கால் மீனவர்கள் 14 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை நீதிமன்றம் விடுதலை செய்த தகவல் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்கால் மீன் வளத்துறை இணை இயக்குநர் என்.இளையபெருமாள் வியாழக்கிழமை கூறும்போது, காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஜூலை 30-ம் தேதியும், 31-ம் தேதியும் இரு பிரிவாக 29 பேர் இலங்கை  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடலில் பாயிண்ட்பெட்ரோ என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட, காரைக்கால் மேடு கிராமத்தை சேர்ந்த வீரகுமார், மோகன், கதிரவன், குட்டிவீரன், முரளி, கந்தசாமி, செல்வமணி, கலைமணி ஆகியோரும், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த மதிவாணன், கனகசபை, கருக்களாச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ், ராஜா, செல்வநாதன், மதுரைவீரன் ஆகிóய 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இவர்கள் வெள்ளிக்கிழமை மண்பம் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் தரப்பில் கூறும்போது, 14 பேர் விடுதலை கிடைத்துவிட்டது. இவர்களின் படகுகள் தரப்படவில்லை. இதனால் மீனவர்கள் படகின்றி செல்லமுடியாது என அங்கு கூறியுள்ளனர். இதனால் விடுதலை செய்யப்பட்டவர்கள் குறித்த நாளில் வருவார்களா என்பது உறுதியாக கூறமுடியவில்லை என தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →