முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து 12 பவுன் தங்க நகைகள் திருட்டு

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி அருகே உள்ள வடமட்டம் பகுதியை சேர்ந்தவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றவர் பரமசிவம். இவர் கடந்த 26-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை, பெங்களூரில் உள்ள குடும்பத்தினரை பார்க்க சென்றுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:31 PM
பகிர்:

காரைக்கால் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து  12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி அருகே உள்ள வடமட்டம் பகுதியை சேர்ந்தவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றவர் பரமசிவம். இவர் கடந்த 26-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை, பெங்களூரில் உள்ள குடும்பத்தினரை பார்க்க சென்றுள்ளார்.

பயணத்தை முடித்துவிட்டு வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கொள்ளைப்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டு அறையில் இருந்த அலமாரிகள் திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் பரமசிவம் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வீட்டில் புகுந்து திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். இதுகுறித்து சந்தேகப்படும் பகுதிகளுக்கு போலீஸ் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →