முகப்பு
தற்போதைய செய்திகள்

வாகன விபத்தில் இறந்த ஆசிரியருக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கடலூர் மாவட்டம், குமராபுரம் ஊராட்சிப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பாலசரஸ்வதி (28). திருமணமாகாதவர்.இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி காரில் சென்ற போது, கோவை

Updated On : 7 செப்டம்பர், 2013 at 6:31 PM
பகிர்:

வாகன விபத்தில் இறந்த ஆசிரியருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.26 லட்சம் வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், குமராபுரம் ஊராட்சிப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பாலசரஸ்வதி (28). திருமணமாகாதவர்.இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி காரில் சென்ற போது, கோவை அருகே அரசு பஸ் மோதி இறந்தார்.இது குறித்து இவரது தாய் சுலோச்சனா ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.வழக்கை நீதிபதி குமரகுரு விசாரித்தார். விபத்தில் இறந்த ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் வழக்குரைஞர்கள் ராமராஜன், சந்திரசேகரன் ஆஜராயினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.