முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓய்வூதியம் கோரும் நலவாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக வழங்ககோரி உண்ணாவிரத போராட்டம் 

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் கோரி விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு உடனுக்குடன்

Updated On : 12 செப்டம்பர், 2013 at 3:10 PM
பகிர்:

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் கோரி விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு உடனுக்குடன் ஓய்வூதியம் அளிக்க கோரி ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

  கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க மாவட்ட செயலர் டி.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட செயலர் எம்.சேகர், தலைவர் என்.மாரியப்பன் பேசினர்.

  தாமதமாக புதுப்பிக்கப்பட்டதை காரணம் காட்டியும், வட்டாட்சியர் சான்றிதழ் கேட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்காமல் தொழிலாளர்களை அழைக்கழிக்ககூடாது. உறுப்பினர்களிடமிருந்து பெறப்படும் ஓய்வூதிய மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து ஓய்வூதியம் வழங்கவேண்டும். கடலூர் கட்டுமானம் மற்றும் அமைப்புசார தொழிலாளர் நல வாரியத்தில் ஏற்பட்டுள்ள ஊழல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இந்த கோரிக்கைகள் உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.