அனுமதியின்றி வைத்திருந்த வெடிகள் பறிமுதல்: ஒருவர் கைது
சிதம்பரம் விளங்கிஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (55). இவர் கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் உள்ள குடோனில் பாதுகாப்பற்ற நிலையில் வெடிகள் வைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல்
சிதம்பரத்தில் அனுமதியின்றி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெடிகளை வியாழக்கிழமை இரவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் விளங்கிஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (55). இவர் கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் உள்ள குடோனில் பாதுகாப்பற்ற நிலையில் வெடிகள் வைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டு 10 பெரிய அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து வெடிகளை அனுமதியின்றி வைத்திருந்ததாக ரமேஷ்பாபுவை கைது செய்தனர்.