உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: முந்திரி வியாபாரி கைது
பண்ருட்டி காவல் நிலையம் போக்குவரத்துத் துறை பிரிவில் உதவி ஆய்வாளராக ஏ.அருண் பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி பணியில் இருந்த போது குடி போதையில் வாகனம் ஓட்டி வந்த வடக்கு
போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த முந்திரி வியாபாரியை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர்.
பண்ருட்டி காவல் நிலையம் போக்குவரத்துத் துறை பிரிவில் உதவி ஆய்வாளராக ஏ.அருண் பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி பணியில் இருந்த போது குடி போதையில் வாகனம் ஓட்டி வந்த வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி கந்தவேல்(40) வழக்குப் பதிவு செய்துள்ளார்.வியாழக்கிழமை மதியம் நான்கு முனை சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சண்முகத்தை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், உதவி ஆய்வாளர் அருணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து, சண்முகம் அளித்த புகாரின் பேரில் கந்தவேலை பண்ருட்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.