முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை: நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 103.08 அடியாக இருந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:38 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த  மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 103.08 அடியாக இருந்தது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மிதமான மழை பெய்தது. மேற்குத்  தொடர்ச்சி மலையில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 21 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 8 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 3 மி.மீ  மழையும், மணிமுத்தாறு அணையில் 7.4 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.

மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1584.05 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. இதேபோல் சேர்வலாறு அணைக்கும் நீர்வரத்து  கணிசமாக இருந்தது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 103.08 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 60.38 அடியாகவும்  இருந்தது.

பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 1150 கனஅடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்த காரணத்தால் மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. இதற்கிடையே பாசனத் தேவைக்காக மணிமுத்தாறு  அணையில் இருந்து 200 கனஅடி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →